சுந்தர் பிச்சையின் கரப்பான் பூச்சி கோட்பாடு ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்த பெண் பயத்தால் கூச்சலிட ஆரம்பித்தார். மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை அவர் மீதிருந்து விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அது வரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்த பதற்றம் பற்றிக்கொண்டது. மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை தன் மீதிருந்து விளக்கி விட்டார். ஆனால் அந்த கரப்பான் இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது இந்த பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டது. இதை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் சூழ்நிலையை சரி செய்ய விரைந்தார். இந்த முறை கரப்பான் பறந்து சென்று அந்த பணியாளர் மீது அமர்ந்து கொண்டது. பணியாளர் தன்னை நிதானித்துக் கொண்டு தன் சட்டையின் மீது அமர்ந்திருக்கும் கரப்பானின் நடத்தையை கவனித்தார். அது தன் நகர்தலை நிறுத்தியதும், தன் விரல்களால் அதை பிடித்து உணவகத்திற்கு வெளியே வீசியெறிந்தார். நான் என் காபியை பருகி கொண...
இரவில் தூங்கும்போது திடீரென்று பள்ளத்தில் விழுவது அல்லது உயரமான இடத்தில் இருந்து விழுவது போன்ற கனவுகள் - காரணம்
இரவில் தூங்கும்போது திடீரென்று பள்ளத்தில் விழுவது அல்லது உயரமான இடத்தில் இருந்து விழுவது போன்ற கனவுகள்: அப்படி கீழே விழும் போது தரையில் அடிப்பதற்கு முன்பு நீங்கள் எழுந்திருக்காவிட்டால் நீங்கள் இறந்து விடுவீர்கள் என சிலர் (சில கிறாமபுற மக்கள்) எண்ணுகிறார்கள். ஆனால் உண்மையில் இறக்க மாட்டீர்கள், அது வெறும் கனவு மட்டும்தான். உயரத்தில் இருந்து கீழே விழுவது போன்ற கனவுகள் மிகவும் பொதுவான கனவுகளில் ஒன்றாகும். இந்த வகை கணவுகளுக்கான அர்த்தம் என்பது பாதுகாப்பின்மை, உறுதியற்ற தன்மை மற்றும் கவலைகளின் அறிகுறியாக இருக்கலாம். உங்கள் உறவுகளில் (Relationship) அல்லது வேலை செய்யும் இடங்களில் உங்கள் மனநிலையை பொறுத்து இந்த வகை கனவுகள் வரும். இது போன்ற கனவுகள் பெரும்பாலும் சில சூழ்நிலை அல்லது சந்தர்ப்பத்தில் உங்கள் தோல்வி அல்லது தாழ்வு மனப்பான்மையை பிரதிபலிக்கலாம் . உங்கள் வேலை / பள்ளியில் தோல்வி, மரியாதை இழத்தல் அல்லது காதலில் தோல்வி போன்றவை ஏற்பட்டு விடுமோ என்ற பயமாகவும் இருக்கலாம். மன நலத்தை புரிந்துகொள்வதற்கு கனவுகள் முக்கியம் என்று சிக்மண்ட் பிர...