உடல் சூட்டை குறைக்க எளிய வழிகள்:
உடல் சூட்டை குறைக்க எளிய வழிகள் |
( முக்கியமாக சூட்டு உடம்பு உள்ளவர்களுக்கு )
- தினமும் இரண்டு அல்லது மூன்று முறை (சூழ்நிலைக்கு ஏற்ப) குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
- அவ்வபோது முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
- மர நாற்காலி, பிரம்பு நாற்காலி அல்லது பிளாஸ்டிக் நாற்காலி, தோல் ஷோபா போன்றவை நல்லது .
- வெல்வெட்டு ஷோபா, ரெகஸீன் ஷோபா, நாற்காலி போன்றவற்றை பயன்படுத்த கூடாது.
- பேருந்து பயணத்தின் போது வெல்வெட்டு துணி போட்ட இருக்கியாயில் அமர்ந்து பயணம் செய்யுமபடியான பேருந்தை தவிர்த்து அரசு பேருந்தையே பயணபடுத்தலாம்.
- கணினி கைபேசி, தொலைக்காட்சி போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதை தவிற்க வேண்டும்,
படுக்கும் முறை :
- மெத்தையில் படுக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
- பிளாஸ்டிக் பாயில் படுக்க வேண்டாம்.
- கோறை பாய் படுப்பதற்கு மிகவும் நல்லது.
- மொட்டை மாடியில் படுக்கும் முன்பு நன்றாக நீர் தெளித்து பின் படுக்க வேண்டும்.
- குளிர்சாதன அறையை தவிற்க வேண்டும். அல்லது AC-ஐ 22 - 27 டிக்கிரிக்குள் பயன்படுத்த வேண்டும்.
- polyester போர்வை பயன்படுத்த கூடாது.
- பருத்தியில் (Cotton) செய்யப்பட போர்வை நல்லது.
உடை :
- பருத்தி் (Cotton) ஆடைகள் மட்டுமே சிறந்தது. உள்ளாடைகள் கட்டாயம் நல்ல பருத்தி ஆடையாக இருக்க வேண்டும்.
உணவு :
- நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிய இடைவெளியில் நீர் அருந்த வேண்டும். (ஒரு மனிதன் ஒரு நாளைக்கு இவ்வளவுதான் நீர் குடிக்க வேண்டும் என்ற எந்த கணக்கும் கிடையாது ஆனால் உடல் உழைப்பிற்கு தகுந்த அளவு நீர் தாராளமாக குடிக்க வேண்டும். )
- மிகவும் குளிர்ந்த நீர் (Ice Water) குடிப்பதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.
- ஜூஸ் -களில் அதிக ஐஸ் கட்டிகள் பயன்படுத்த கூடாது.
- கிடைக்கும் போது இளநீர் , நுங்கு, மோர் ஆகியவை அதிகம் குடிக்க வேண்டும.
- தயிர் அதிகம் குடிக்க கூடாது.
- பழைய சோறு நல்லது (காலைலயில் )
- தற்பூசனி , வெள்ளரி பிஞ்சு போன்றவறரை அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் .
- வெந்தையும் போட்டு ஊற வைத்த நீர் அவ்வப்போது குடிப்பது உடல் சூட்டை குறைக்கும்.
உங்கள் கருத்துக்கள் வரவேறக்கப்படுகின்றது .
கருத்துகள்
கருத்துரையிடுக